/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எல்., போட்டிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் ஐ.பி.எல்., போட்டிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஐ.பி.எல்., போட்டிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஐ.பி.எல்., போட்டிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஐ.பி.எல்., போட்டிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : மார் 22, 2025 08:35 PM
பெங்களூரு: பெங்களூரில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, சின்னச்சாமி விளையாட்டு அரங்குக்கு, பி.எம்.டி.சி., சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின், சின்னச்சாமி விளையாட்டு அரங்கத்தில், இன்று ஐ.பி.எல்., போட்டிகள் துவங்குகின்றன. ஏப்ரல் 2, 10, 18, 24, மே 2, 13, 17 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கவுள்ளன.
போட்டிகளை காண, பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் வருகை தருவர். போட்டியை காண வரும் மக்களின் வசதிக்காக, பி.எம்.டி.சி., சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சின்னச்சாமி விளையாட்டு அரங்கில் இருந்து காடுகோடி பஸ் நிலையம், சர்ஜாபுரா, எலக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா, மாகடி சாலை, ஆர்.கே.ஹெக்டே நகர், ஹொஸ்கோட், பனசங்கரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே போட்டிகள் முடிந்த பின், பயணியர் பாதுகாப்பாக வீடு திரும்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.