Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி

சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி

சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி

சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி

ADDED : ஜூன் 26, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
ஷிவமொக்கா : சாகரா தாலுகாவின், சிகந்துாரில் பாலம் கட்டும் பணி, முடியும் கட்டத்தில் உள்ளது. பாலத்தின் திறனை மதிப்பிட, நேற்று நடந்த முதற்கட்ட ஆய்வு வெற்றி அடைந்துள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர் பீர் பாஷா, நேற்று அளித்த பேட்டி:

ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின், சிகந்துாரில் சராவதி உப்பங்கழி வழியாக செல்லும், அம்பரகோட்லு, களசா இடையே 2.44 கி.மீ., நீளத்திற்கு, 450 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பெயின்டிங் உட்பட, இறுதிகட்டப் பணிகள், முடியும் நிலையில் உள்ளன. திறந்து வைத்த பின், பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

பாலத்தின் திறனை தெரிந்து கொள்ள சோதனை நடத்தப்படுகிறது. 23ம் தேதி 50 டன், 24ம் தேதி 75 டன், நேற்று 100 டன் திறன் கொண்ட டிப்பர்கள், 24 மணி நேரமும் பாலம் மீது நிறுத்தப்பட்டன. சோதனை வெற்றி அடைந்துள்ளது. 100 டன் எடையை தாங்கும் திறன், பாலத்துக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

பாலத்தின் பாதுகாப்பு தொடர்பான அறிக்கை வந்துள்ளது. அது சாதகமாக வந்துள்ளது. திட்டமிட்டபடியே பாலம் அமைந்துள்ளது. அடுத்த வாரம் இரண்டாம் கட்ட சோதனை ஆய்வு நடக்கும். பாலத்துக்கு பொருத்தியுள்ள கேபிள்களின் திறன் ஆய்வு செய்யப்படும். அதன்பின் பயன்பாட்டுக்கு தயாராகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிகந்துார் பாலத்தின், முதற்கட்ட திறன் சோதனை வெற்றி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு திருப்தியான நாள். போக்குவரத்துக்கு சரியான வசதி இல்லாமல், மக்கள் அவதிப்பட்டனர். கிராம பஞ்சாயத்து சாலையை, தரம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா காரணம். விரைவில் பாலம் திறப்பு விழா நடக்கும்.

- பி.ஒய்.ராகவேந்திரா,

எம்.பி., ஷிவமொக்கா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us