/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்தராமையா 10 ஆண்டு முதல்வர் மின்சார அமைச்சர் ஜார்ஜ் பேட்டி சித்தராமையா 10 ஆண்டு முதல்வர் மின்சார அமைச்சர் ஜார்ஜ் பேட்டி
சித்தராமையா 10 ஆண்டு முதல்வர் மின்சார அமைச்சர் ஜார்ஜ் பேட்டி
சித்தராமையா 10 ஆண்டு முதல்வர் மின்சார அமைச்சர் ஜார்ஜ் பேட்டி
சித்தராமையா 10 ஆண்டு முதல்வர் மின்சார அமைச்சர் ஜார்ஜ் பேட்டி
ADDED : ஜூன் 04, 2025 11:17 PM

மைசூரு:''மக்கள் ஆதரவு இருப்பதால் சித்தராமையா இன்னும் 10 ஆண்டுகள் முதல்வராக இருப்பார்,'' என, மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா நவம்பர் மாதம் மாற்றப்படுவார் என்று ஊடகத்தினர் தான் கூறுகின்றனர்.
நீங்கள் தான், முதல்வர் மாற்றத்திற்கு தேதி, நேரம் நிர்ணயம் செய்தீர்களா? மக்கள் ஆதரவு இருப்பதால் சித்தராமையா இன்னும் 10 ஆண்டுகள் முதல்வராக இருப்பார்.
ஸ்மார்ட் மீட்டர் முறைகேடு பற்றி பேச, பா.ஜ.,வுக்கு எந்த உரிமையும் இல்லை. அரசு திட்டங்கள் அனைத்திலும் குறை கண்டுபிடிக்கின்றனர். பா.ஜ., எதிர்ப்புத் தெரிவித்ததால், பெங்களூரில் இரும்புப் பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
பாலம் கட்டப்படாததால் மக்கள் தான் அவதிப்படுகின்றனர். ஸ்மார்ட் மீட்டர் தொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் உரிய பதில் அளிப்போம். எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் வலிமை என்னிடம் உள்ளது.
முன்னாள் டி.எஸ்.பி., கணபதி தற்கொலை வழக்கிலும், பா.ஜ., என் மீது குற்றச்சாட்டு கூறியது. அந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்பது சி.பி.ஐ., விசாரணையில் நிரூபணம் ஆனது.
நான் மென்மையான நபர் என்று நினைக்கின்றனர். என் பேச்சில் தான் மென்மை இருக்கும்; செயலில் இருக்காது. இளைஞர் காங்கிரஸ் பதவியில் இருந்து அமைச்சர் பதவி வரை வந்து இருக்கிறேன். மென்மையாக இருந்தால், அரசியலில் வளர முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.