/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகனை சாகடித்த பாம்பை கொல்ல விரும்பாத பெற்றோர் மகனை சாகடித்த பாம்பை கொல்ல விரும்பாத பெற்றோர்
மகனை சாகடித்த பாம்பை கொல்ல விரும்பாத பெற்றோர்
மகனை சாகடித்த பாம்பை கொல்ல விரும்பாத பெற்றோர்
மகனை சாகடித்த பாம்பை கொல்ல விரும்பாத பெற்றோர்
ADDED : ஜூன் 04, 2025 11:17 PM

பெலகாவி: பெற்ற மகனை சாகடித்த பாம்பை, குடும்பத்தினர் கண்டுபிடித்து பாதுகாப்பாக வனத்தில் விட ஏற்பாடு செய்தனர்.
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின், ககமரி கிராமத்தில் வசித்தவர் அமித் குருலிங்கா சிந்துாரா, 10. இவர் மே 31ம் தேதி, வீட்டில் மொபைல் போன் பார்த்தபடி தரையில் படுத்திருந்தார்.
அப்படியே உறங்கிவிட்டார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த பாம்பு, சிறுவனை கடித்தது.
இதை பார்த்த பெற்றோர், மகனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் சிறுவன் உயிர் பிழைக்கவில்லை.
அவரை கடித்த பாம்பு, வீட்டுக்குள் மறைந்திருந்தது. வெளியே வரவில்லை.
அதே வீட்டில் மகனுக்கு இறுதிச் சடங்குகள் செய்து முடித்த பெற்றோர், பாம்பு வல்லுநருக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று காலை அங்கு வந்த பாம்பு வல்லுநர், வீட்டுக்குள் மறைந்திருந்த பாம்பை பிடித்தார். இதை அடித்து கொல்லும்படி, அக்கம், பக்கத்தினர் கூறியும், சிறுவனின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.
அதை பாதுகாப்பான இடத்தில் விட்டு விடும்படி பாம்பு வல்லுநரிடம் கேட்டுக்கொண்டார். அவரும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுவிட்டார்.