/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆக., 11ல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சலுகை ஆக., 11ல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சலுகை
ஆக., 11ல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சலுகை
ஆக., 11ல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சலுகை
ஆக., 11ல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சலுகை
ADDED : ஜூன் 19, 2025 11:31 PM

பெங்களூரு: ஆகஸ்ட் 11ல் துவங்கும் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை இம்முறை இரண்டு வாரங்கள் நடத்துவதென, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரின் விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
சிக்கபல்லாபூரின் நந்தி மலையில், அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால், அங்கு கூட்டம் நடத்த முடியவில்லை. பெங்களூரில் நடத்தப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி, நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆகஸ்ட் 11 முதல் இரண்டு வாரங்கள், மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பணமின்றி சிகிச்சை
அரசு துறைகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், 'சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷா டிரஸ்ட்' மூலமாக, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை, பணமில்லாமல் சிகிச்சை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஊழியர்களிடம் 100 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்; மீதி தொகையை அரசு செலுத்தும்.
கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:
ஹாவேரி, ஹனகல்லின், பசாபுரா கிராமத்தின் பெயரை முன்பு அழைத்தது போன்று, 'கேருகுட்டா பசாபுரா' என பெயர் மாற்றம்
பீதர், பசவகல்யாணாவின் புதிதாக கட்டப்படும் அனுபவ மண்டப கட்டுமான பணிகளுக்கான செலவை, 612 கோடி ரூபாயில் இருந்து, 742 கோடி ரூபாயாக உயர்த்த அனுமதி
ராய்ச்சூர், லிங்கசகூரின், ஷிலஹள்ளி அருகில், கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆற்றுக்கு குறுக்கே பாலம் கட்ட, ஹூப்பள்ளி நகரின், ராஜா கால்வாய்க்கு தடுப்பு சுவர் கட்ட, 23.51 கோடி ரூபாய் செலவிட ஒப்புதல்.
50 சதவீதம்
ராய்ச்சூரில் குருபர் சங்கத்துக்கு, கனகதாசர் பொது நுாலகம் கட்ட, ராய்ச்சூர் நகரின் சியதலாப் படலாவனேவில், மாநகராட்சிக்கு சொந்தமான 1,200 சது அடி நிலத்தை 50 சதவீதம் சலுகை விலையில் வழங்க முடிவு
எத்தின ஹொளே திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஹாசன், துமகூரு மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை இடையே ஏற்பட்ட சிக்கலை சரி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


