/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எல்., சூதாட்டத்துக்கு திருடிய ரூ. 40 லட்சம் நகைகள் மீட்பு ஐ.பி.எல்., சூதாட்டத்துக்கு திருடிய ரூ. 40 லட்சம் நகைகள் மீட்பு
ஐ.பி.எல்., சூதாட்டத்துக்கு திருடிய ரூ. 40 லட்சம் நகைகள் மீட்பு
ஐ.பி.எல்., சூதாட்டத்துக்கு திருடிய ரூ. 40 லட்சம் நகைகள் மீட்பு
ஐ.பி.எல்., சூதாட்டத்துக்கு திருடிய ரூ. 40 லட்சம் நகைகள் மீட்பு
ADDED : ஜூன் 13, 2025 11:23 PM

மாண்டியா: ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகாவின், முதிகெரே கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 30. பெயருக்கு மட்டுமே, இவர் ஒரு விவசாயி. ஆனால் திருடுவதே இவரது தொழில். திருட்டு நகைகளை விற்று ஐ.பி.எல்., சூதாட்டம் ஆடியுள்ளார். இதற்காகவே இவரை கிராமத்தினர் 'ஐ.பி.எல்., சந்தோஷ்' என்றே அழைக்கின்றனர்.
மாண்டியாவின், நாகமங்களா, துருவகெரே, ஹுலியூர் துர்கா உட்பட, பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை குறிவைத்து சந்தோஷ் திருடியுள்ளார். நாகமங்களாவில் திருட்டு குற்றங்கள் அதிகரித்ததால், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தீவிர விசாரணை நடத்திய குழுவினர், ஆதாரங்களின் அடிப்படையில், சந்தோஷை நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.