/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தென்மேற்கு பருவமழை தீவிரம் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' தென்மேற்கு பருவமழை தீவிரம் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
தென்மேற்கு பருவமழை தீவிரம் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
தென்மேற்கு பருவமழை தீவிரம் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
தென்மேற்கு பருவமழை தீவிரம் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
ADDED : ஜூன் 13, 2025 11:22 PM
பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று கடலோர மாவட்டங்கள் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இன்று கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மற்றும் ஷிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.
இம் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.
அதுபோன்று, பெலகாவி, தார்வாட், ஹாவேரி, ஹாசன் மாவட்டங்களில் 15ம் தேதி வரையிலும்; 16ம் தேதி உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, குடகு, ஷிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 27 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்ஷியசும் வெப்பம் பதிவாகலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.