/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.150 கோடி அரசு நிலம் 'ஆட்டை?' பெங்., கலெக்டருக்கு பா.ஜ., கடிதம்! ரூ.150 கோடி அரசு நிலம் 'ஆட்டை?' பெங்., கலெக்டருக்கு பா.ஜ., கடிதம்!
ரூ.150 கோடி அரசு நிலம் 'ஆட்டை?' பெங்., கலெக்டருக்கு பா.ஜ., கடிதம்!
ரூ.150 கோடி அரசு நிலம் 'ஆட்டை?' பெங்., கலெக்டருக்கு பா.ஜ., கடிதம்!
ரூ.150 கோடி அரசு நிலம் 'ஆட்டை?' பெங்., கலெக்டருக்கு பா.ஜ., கடிதம்!
ADDED : ஜூன் 11, 2025 02:27 AM

பெங்களூரு: 'நில மாபியாவிடம், தாசில்தார் அலுவலக அதிகாரிகள் விற்பனை செய்ய முயற்சிக்கும் 150 கோடி ரூபாய் அரசு நிலத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்' என, பெங்களூரு கலெக்டர் ஜெகதீசுக்கு, பா.ஜ., பிரமுகரும், மாநகராட்சி ஆளுங்கட்சி முன்னாள் தலைவருமான ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதம்:
பெங்களூரு தெற்கு தாலுகா, உத்தரஹள்ளி கிராமம், தலகட்டாபூர் கிராமத்தில் சர்வே எண் 30ல் 11.16 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.
இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய். இந்த நிலம் தொடர்பான வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடக்கிறது.
ஆனாலும், பெங்களூரு தெற்கு தாசில்தார் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் அந்த நிலத்தை, நில மாபியா கும்பலை சேர்ந்த சுரேந்திரா என்பவர் பெயருக்கு மாற்றுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.
இந்த ஆவணங்கள், தற்போது, பெங்களூரு மாவட்ட கூடுதல் கலெக்டர் அபூர்வாவின் அலுவலகத்திற்கு வந்துள்ளன. மதிப்புமிக்க அரசு நிலம், நில மாபியா கைக்கு செல்லாமல் தடுக்க வேண்டும். அரசு நிலத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும். போலி ஆவணங்கள் தயாரித்த தாசில்தார் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.