/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரைகர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை
கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை
கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை
கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை
ADDED : மார் 20, 2025 10:26 PM

பெங்களூரு: கர்நாடக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரின் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது: முதல்வர், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்களின் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.,க்களும் கஷ்டப்படுகிறார்கள். சம்பளத்தை உயர்த்த வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பலரிடம் இருந்து பரிந்துரை வந்தது. இதனால் இந்த முடிவை முதல்வர் எடுத்து உள்ளார். அனைவரும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு அமைச்சர் பாட்டீல் கூறுகையில்,சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை ஒப்பிடுகையில், சம்பளத்தை உயர்த்துவது தவறு கிடையாது என்றார்.
பா.ஜ., கேள்வி
மாநில நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், சம்பள உயர்வு தேவையா என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
எவ்வளவு உயர்கிறது
கர்நாடக சட்டசபை சம்பளம், பென்சன் மற்றும் படிகள் திருத்த மசோதாப்படி, முதல்வரின் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும்
அமைச்சர்களின் சம்பளம் ரூ.60ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும்
எம்.எல்.ஏ.,க்கள் எம்.எல்.சி.,க்களின் சம்பளம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும்
பென்சன் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.95 ஆயிரமாகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் போக்குவரத்து படி ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாகவும், சொந்த தொகுதியில் பயணம் மேற்கொள்ள ரூ.60 ஆயிரமாகவும்
மருத்துவ படி, டெலிபோன் கட்டணம், தபால் கட்டண படி ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாகவும்
சபாநாயகர், சட்ட மேலவை தலைவர் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.