மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்
மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்
மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்
ADDED : செப் 10, 2025 02:08 AM

பெங்களூரு : புற்றுநோய் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தண்டனை கைதி, தப்பியோடினார்.
விஜயபுராவை சேர்ந்தவர் சேத்தன் கல்யாண், 35, குற்ற வழக்கொன்றில் கைதானார். தண்டனை விதிக்கப்பட்ட இவர், விஜயபுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பெங்களூரு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிறை டாக்டர்களின் ஆலோசனைப்படி, ஆகஸ்ட் 21ல் அவரை சிறை அதிகாரிகள், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று முன் தினம் மதியம் 1:00 மணியளவில், சேத்தன், போலீசாரின் கவனத்தை திருப்பிவிட்டு, மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார்.
வாய் புற்றுநோய் காரணமாக, அவரால் பேசவும் முடியவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கைதி தப்பியோடியது குறித்து, சித்தாபுரா போ லீஸ் நிலையத்தில், போலீசார் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் கைதியை தேடி வருகின்ற னர்.