/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.எம்.டி.சி., திட்டத்திற்கு நல்ல வரவேற்பு தினமும் பெங்களூரு திவ்ய தரிசனம்? பி.எம்.டி.சி., திட்டத்திற்கு நல்ல வரவேற்பு தினமும் பெங்களூரு திவ்ய தரிசனம்?
பி.எம்.டி.சி., திட்டத்திற்கு நல்ல வரவேற்பு தினமும் பெங்களூரு திவ்ய தரிசனம்?
பி.எம்.டி.சி., திட்டத்திற்கு நல்ல வரவேற்பு தினமும் பெங்களூரு திவ்ய தரிசனம்?
பி.எம்.டி.சி., திட்டத்திற்கு நல்ல வரவேற்பு தினமும் பெங்களூரு திவ்ய தரிசனம்?
ADDED : ஜூன் 06, 2025 11:21 PM

பெங்களூரு: பெங்களூரின் கோவில்கள் தரிசனம் செய்யும் வகையில், பி.எம்.டி.சி., செயல்படுத்தியுள்ள 'பெங்களூரு திவ்ய தரிசனம்' திட்டத்துக்கு, மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
பெங்களூரின் கோவில்கள், சுற்றுலா தலங்களை காண, சுற்றுலா பயணியருக்கு வசதியாக 'பெங்களூரு திவ்ய தரிசனம்' திட்டத்தை பி.எம்.டி.சி., செயல்படுத்தியது. மே 31ம் தேதியன்று துவக்கப்பட்டது. திட்டத்துக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ், காளி ஆஞ்சநேயர் கோவில், ராஜராஜேஸ்வரி கோவில், சிருங்ககிரி சண்முகர் கோவில், ஸ்ரீதேவி கருமாரியம்மன், ஓம்கார் ஹில்ஸ், வசந்தபுரா இஸ்கான் கோவில், ஆர்ட் ஆப் லிவிங், பனசங்கரி கோவில்களை தரிசனம் செய்து, மீண்டும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை வந்தடையும்.
காலை 8:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:05 மணிக்கு திரும்புவதால், பொது மக்கள் 'திவ்ய தரிசனம்' திட்டத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரே நாளில் பல கோவில்களை தரிசிக்கலாம்.
இதற்கு முன்பு மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் திவ்ய தரிசனம் அழைத்துச் செல்ல திட்டமிட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே வாரத்தில் அனைத்து நாட்களும் திவ்ய தரிசனம் அழைத்துச் செல்ல, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
'பெங்களூரு தர்ஷினி' பழைய திட்டமாகும். நகரின் அருகில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மாதந்தோறும் சராசரியாக 5,000 பேர் பயணம் செய்கின்றனர்.
சிக்கபல்லாபூரின் போக நந்தீஸ்வரர் கோவில், கனிவே பசவேஸ்வரா கோவில், விஸ்வேஸ்வரய்யா மியூசியம், ரங்கஸ்தலா ரங்கசுவாமி கோவில், ஈஷா பவுன்டேஷன் என, பல இடங்களை பார்க்கின்றனர்.
'பெங்களூரு திவ்ய தரிசனம்' திட்டம் புதிய திட்டமாகும். இது பற்றி தகவல் தெரிந்து கொள்ளவும், டிக்கெட் முன் பதிவு செய்யவும், www.mybmtc.com மற்றும் www.ksrtc.inல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.