/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தயானந்தா சஸ்பெண்ட் 'மாஜி' கமிஷனர் கண்டனம் தயானந்தா சஸ்பெண்ட் 'மாஜி' கமிஷனர் கண்டனம்
தயானந்தா சஸ்பெண்ட் 'மாஜி' கமிஷனர் கண்டனம்
தயானந்தா சஸ்பெண்ட் 'மாஜி' கமிஷனர் கண்டனம்
தயானந்தா சஸ்பெண்ட் 'மாஜி' கமிஷனர் கண்டனம்
ADDED : ஜூன் 06, 2025 11:22 PM

பெங்களூரு: 'பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கர்நாடக போலீஸ் வரலாற்றில், ஒரு கருப்பு அத்தியாயம்' என, பெங்களூரின் முன்னாள் போலீஸ் கமிஷனரும், பா.ஜ., செய்தி தொடர்பாளருமான பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு அரங்கில் நடந்த கூட்ட நெரிசல் அசம்பாவிதத்துக்கு, யார் காரணம் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.
துணை முதல்வர் சிவகுமாரே, இதற்கு நேரடி பொறுப்பாவார். நடந்த அசம்பாவிதத்தால், முதல்வர் சித்தராமையாவுக்கு 'கிலி' ஏற்பட்டுள்ளது.
நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கர்நாடக போலீஸ் வரலாற்றில், ஒரு கருப்பு அத்தியாயம்.
நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவை சஸ்பெண்ட் செய்த மாநில அரசின் முடிவு சரியானது அல்ல. இது அரசின் இயலாமை மற்றும் கோழைத்தனத்தின் வெளிப்பாடாகும்.
பெங்களூரை பாதுகாப்பாக வைத்திருக்க, போலீஸ் கமிஷனரும், அவரது குழுவினரும் இரவு முழுதும் பாடுபட்டனர்.
இப்படி உழைத்ததற்கும், உண்மையை கூறியதற்கும் போலீஸ் கமிஷனருக்கு கிடைத்த பரிசு, சஸ்பெண்ட்.
இதுவரை எந்த முதல்வரும், இந்த அளவுக்கு இயலாமையால், கோழைத்தனத்துடன் நடந்து கொண்டது இல்லை. அரசின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது. மாநிலத்தை பொருத்தவரை, இந்த அரசே விபத்தாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.