/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி பொருட்கள் விற்க அனுமதி எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி பொருட்கள் விற்க அனுமதி
எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி பொருட்கள் விற்க அனுமதி
எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி பொருட்கள் விற்க அனுமதி
எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி பொருட்கள் விற்க அனுமதி
ADDED : ஜூன் 18, 2025 11:17 PM
பெங்களூரு: எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி தயாரிப்புகளும், இரண்டு மெட்ரோ நிலையங்களில் அமுல் தயாரிப்புகளும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள பட்டந்துார் அக்ரஹாரா, இந்திரா நகர், பென்னிகானஹள்ளி, பையப்பனஹள்ளி, டிரினிட்டி, எஸ்.எம்.வி.டி., கெம்பே கவுடா, நேஷனல் கல்லுாரி, ஜெயநகர், பனசங்கரி ஆகிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களில், அமுல் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்ய பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
இதையடுத்து, மெட்ரோ நிலையங்களில் அமுல் கடைகள் திறக்கப்பட்டன. கர்நாடகாவின் பால் தயாரிப்பு நிறுவனமான நந்தினிக்கு வாய்ப்பு அளிக்காமல், குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான அமுலுக்கு வாய்ப்பு அளித்ததற்கு, ம.ஜ.த., - பா.ஜ., கன்னட ஆர்வலர்கள், பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், மெட்ரோ நிர்வாகத்திற்கும், பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவகுமாருக்கும் தேவையில்லாத அவப்பெயர் ஏற்ப்பட்டது.
இந்நிலையில், நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
மெட்ரோ நிலையங்களில் கடை அமைப்பதற்காக வெளியிட்ட டெண்டரில் அமுல் நிறுவனத்தை தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை. இதனால், அமுலுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பியதாலும், நந்தினிக்கு ஆதரவு அளிக்கும் நோக்கிலும், அமுல் நிறுவனம் இரண்டு மெட்ரோ நிலையங்களில் மட்டும் தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
மீதமுள்ள எட்டு நிலையங்களில், நந்தினி தயாரிப்புகளே விற்கப்படும். ஏற்கனவே, திறந்த கடைகளை மூடுவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
எட்டு மெட்ரோ நிலையங்களில் நந்தினி தயாரிப்புகள் விற்கப்படும். இரண்டில் மட்டும் அமுல் தயாரிப்புகள் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நந்தினியின் உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி உள்ளோம். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மஹேஸ்வர ராவ்,
மெட்ரோ நிர்வாக இயக்குநர்.