/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் காயம் பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் காயம்
ADDED : ஜூன் 18, 2025 11:17 PM

மைசூரு: மைசூரில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன், சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 20 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மைசூரு மாவட்டம், பிரியாபட்டணாவின் கம்பாலாபுராவை சேர்ந்த எம்.ஆர்.நோபிள் ஆங்கிலப் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன், 20 மாணவர்களுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.
ஹப்பனகுப்பே - ஹொசகொப்பால் கிராமங்கள் இடையே சென்றபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க, ஓட்டுநர் சீனிவாஸ் வாகனத்தை திருப்பினார்.
அப்போது திடீரென பிரேக் பழுதாகி உள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 20 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதை பார்த்த வயலில் இருந்தவர்கள், சாலையில் சென்றோர், வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகளை மீட்டனர். காரில் வந்தவர்கள், குழந்தைகளை மீட்டு ஹூன்சூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பள்ளியின் 20 மாணவர்களில், 11 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மீதமுள்ள ஒன்பது மாணவர்கள், தீவிர சிகிச்சைக்காக மைசூரு நகரில் உள்ள செலுவாம்பா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 'மாணவர்களுக்கு சிறு காயங்கள் தான் ஏற்பட்டு உள்ளன; பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்றனர்.
தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர், அலறியடித்துக் கொண்டு, இரு மருத்துவமனைகளுக்கும் விரைந்தனர். தலை, மூக்கில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் சீனிவாஸ், மைசூரு நகரின் கே.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹூன்சூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
� விபத்துக்குள்ளான தனியார் பள்ளி வேன். � மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவ - மாணவியர்.