Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு கட்டடங்கள், பூங்காக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் பெயர் நீக்க கெடு

அரசு கட்டடங்கள், பூங்காக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் பெயர் நீக்க கெடு

அரசு கட்டடங்கள், பூங்காக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் பெயர் நீக்க கெடு

அரசு கட்டடங்கள், பூங்காக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் பெயர் நீக்க கெடு

ADDED : ஜூன் 28, 2025 11:09 PM


Google News
பெங்களூரு: தாவணகெரேயில் அரசு கட்டடங்கள், அரங்குகள், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட அரசு சொத்துக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளின் பெயர் சூட்டுவதை நிறுத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாவணகெரேயில் உள்ள பஸ் நிலையத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஷாமனுார் சிவசங்கரப்பாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, குண்டுவடா ஏரிக்கு அவரது மகன் மல்லிகார்ஜுனா பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து, தாவணெகரேயை சேர்ந்த வக்கீல் ராகவேந்திரா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:

அரசு கட்டடங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லது இறந்த பிரமுகர்களின் பெயர்கள் சூட்டப்பட வேண்டும். ஆனால், தாவணகெரேயில், தனியார் பஸ் நிலையத்துக்கு, ஷாமனுார் சிவசங்கரப்பா பெயரும்; குண்டுவடா ஏரிக்கு அவரது மகன் மல்லிகார்ஜுனா பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இதுபோன்று பல அரங்குகளுக்கு, உயிருடன் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பெயர்கள், பெயர் சூட்டப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதுபோன்று அரசு தரப்பு வக்கீலின் வாதங்களை கேட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

அரசு கட்டடங்கள், அரங்குகள், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு சொத்துகள், உயிருடன் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பெயர்களை சூட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தாவணகெரே நகராட்சி மன்றம், மாவட்ட பஞ்சாயத்து மன்றம், புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் நிலையம், பூங்காக்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பெயர் பலகைகளை அகற்ற, நான்கு வாரம் காலக்கெடு விதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ., தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us