/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பெங்., மாநகராட்சி தேர்தல் நடத்த தயார்' 'பெங்., மாநகராட்சி தேர்தல் நடத்த தயார்'
'பெங்., மாநகராட்சி தேர்தல் நடத்த தயார்'
'பெங்., மாநகராட்சி தேர்தல் நடத்த தயார்'
'பெங்., மாநகராட்சி தேர்தல் நடத்த தயார்'
ADDED : மார் 15, 2025 11:33 PM
பெங்களூரு: பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது. எத்தனை நாட்களுக்கு தான் தள்ளி வைப்பது? இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் சிலர், அதிகாரப்பூர்வமற்ற வகையில் தேர்தல் நடத்த ஆதரவு அளித்துள்ளனர். இப்போது அந்த பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழகம் சென்னையில் 22ல் நடக்கும் 'லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கும்படி, கட்சி தலைமையும், நம் முதல்வரும் உத்தரவிட்டு உள்ளனர்.
டாக்டர்களின் அறிவுரையின்படி, சென்னைக்கு முதல்வரால் செல்ல முடியாது. நான் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.