/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த விரைவில் தனி அமைப்பு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த விரைவில் தனி அமைப்பு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த விரைவில் தனி அமைப்பு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த விரைவில் தனி அமைப்பு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த விரைவில் தனி அமைப்பு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : மார் 15, 2025 11:30 PM

பெங்களூரு: “சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த, அஹமதாபாத்தில் இருப்பதை போன்று, கர்நாடகாவில் தனி அமைப்பு உருவாக்க முயற்சிக்கிறோம்,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று 'சி.ஐ.டி., இ கோட் - 2025' எனும் சைபர் கிரைம் விசாரணை குறித்த ஒருநாள் மாநாட்டுக்கு சி.சி.ஐ.டி.ஆர்., எனும் சைபர் கிரைம் விசாரணை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்தது.
சைபர் கிரைம் தொடர்பான கையேட்டை வெளியிட்டு மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசியதாவது:
உலகம் விரிவடைகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும், அதே நேரத்தில் இவற்றை பாதுகாப்பதும், பெரும் சவாலாக உள்ளது. இதை மனதில் கொண்டு, போலீசார் தங்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த வேண்டும்.
கர்நாடகா, தகவல் தொழில்நுட்பத்துடன், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் முன்னணியில் உள்ளது. சட்டசபையில் ஆறுக்கும் மேற்பட்ட கேள்விகள், சைபர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்பட்டன. அவற்றுக்கு நான் பதில் அளித்தேன். வருங்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
இப்போதே முதன் முறையாக, கர்நாடகா, இன்போசிசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, சைபர் பாதுகாப்பு குறித்து திட்டம் வகுக்கப்படுகிறது. இன்போசிஸ் அறக்கட்டளையின் சுதா மூர்த்தி, 20 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மாநிலத்தில் 45,000 பேருக்கு, சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு மட்டுமின்றி, நீதித்துறையினருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வித்துறையிலும், பல்கலைக்கழகங்கள் சைபர் சவால்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பாட திட்டங்கள் வகுத்து, மாணவர்களுக்கு போதிக்கின்றன.
கர்நாடக அரசு 54 சைபர் போலீஸ் நிலையங்கள் திறந்துள்ளது. இந்த சைபர் பிரிவுக்காக, 103 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
அஹமதாபாத்தில் கேந்திரிய சைபர் பல்கலைக்கழகத்தை நான் நேரில் சென்று பார்த்தேன். அதே போன்ற பல்கலைக்கழகத்தை, கர்நாடகாவிலும் அமைக்க அரசு ஆலோசித்தது. ஆனால் இன்னும் திட்டம் கைகூடவில்லை.
பல்கலைக்கழகத்துக்கு பதிலாக, சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த உயர்மட்ட அமைப்பு உருவாக்கப்படும். சைபர் குற்றங்கள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.