/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சிறார்களின் மாரடைப்புக்கு மொபைல் போனும் காரணம்' 'சிறார்களின் மாரடைப்புக்கு மொபைல் போனும் காரணம்'
'சிறார்களின் மாரடைப்புக்கு மொபைல் போனும் காரணம்'
'சிறார்களின் மாரடைப்புக்கு மொபைல் போனும் காரணம்'
'சிறார்களின் மாரடைப்புக்கு மொபைல் போனும் காரணம்'
ADDED : ஜூன் 29, 2025 10:58 PM
பெங்களூரு: கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு இடங்களில் சிறார்கள் மாரடைப்புக்கு பலியாகின்றனர். இதற்கு மொபைல் போன் பயன்படுத்துவதே காரணம் என்பது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹாசன் உட்பட, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி, பள்ளி சிறார்களும் மாரடைப்புக்கு ஆளாகின்றனர்.
இதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள, ஹூப்பள்ளியின் கர்நாடக மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வக டாக்டர்கள் குழுவினர், ஆய்வு நடத்தினர்.
எட்டாவது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கொழுப்பு அதிகம் உள்ள மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் பல விஷயங்கள் தெரியவந்தது.
உடற்பயிற்சி இல்லாதது, மொபைல் போனிலேயே காலம் கழிப்பது, ஜங்க் புட் சாப்பிடுவதால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது, ஆய்வில் தெரிய வந்தது.
ஆய்வுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, சிறு வயதிலேயே நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் உட்பட, பல்வேறு நோய்களின் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
டாக்டர்கள், அந்த சிறார்களின் பெற்றோரிடம் சூழ்நிலையை விவரித்து, பிள்ளைகளின் அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறார்கள் தினமும் ஒரு மணி நேரம் முதல், நான்கு மணி நேரம் வரை, மொபைல் போன் பார்ப்பது, ஆய்வில் தெரிந்தது.
அவர்களின் உணவு நடைமுறையும் சரியாக இல்லை. ஆய்வு குழுவினர், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, உடற் பயிற்சிகள், உணவு டயட் குறித்து ஆலோசனை கூறியுள்ளனர்.
சிறு வயதில் மாரடைப்பு ஏற்பட, மொபைல் போன் பயன்பாடே, முக்கிய காரணம் என, ஆய்வில் தெரிந்தது. இது குறித்து பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.