/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருமணத்துக்கு முன் மகள் கர்ப்பம் கொல்ல முயன்ற தந்தை கைது திருமணத்துக்கு முன் மகள் கர்ப்பம் கொல்ல முயன்ற தந்தை கைது
திருமணத்துக்கு முன் மகள் கர்ப்பம் கொல்ல முயன்ற தந்தை கைது
திருமணத்துக்கு முன் மகள் கர்ப்பம் கொல்ல முயன்ற தந்தை கைது
திருமணத்துக்கு முன் மகள் கர்ப்பம் கொல்ல முயன்ற தந்தை கைது
ADDED : ஜூன் 29, 2025 10:59 PM

ஷிவமொக்கா: திருமணத்துக்கு முன்பே, கர்ப்பிணியான மகளை குடும்ப மானத்துக்கு பயந்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது செய்யப்பட்டார்.
ஷிவமொக்கா மாவட்டம், சொரபா தாலுகாவின், உளவி அருகில் உள்ள கானஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் தர்ம நாயக், 53. இவருக்கு 21 வயதில் மகள் உள்ளார். இவருக்கு திருமணம் செய்ய, தந்தை தயாராகி வந்தார். இதற்கிடையே மகள் வேறொரு இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதில், மகள் கர்ப்பமடைந்தார்.
இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தது. திருமணத்துக்கு முன்பே மகள் கர்ப்பமானதால், தர்ம நாயக் கோபமடைந்தார். இது வெளியே தெரிந்தால், குடும்ப மானம் போகும் என, அஞ்சினார்.
மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதன்படி நேற்று முன்தினம் காலை, மருத்துவமனைக்கு செல்லலாம் என, கூறி மனைவி, மகளுடன் புறப்பட்டார்.
மருத்துவமனைக்கு செல்லாமல், கானஹள்ளி அருகில் உள்ள, கன்னுார் வனப்பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கு ஏற்கனவே கொண்டு வந்த கயிற்றால், மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்.
அப்போது தர்ம நாயக்கின் மனைவி, கணவரின் காலில் விழுந்து மகளை கொல்ல வேண்டாம் என, கதறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. கழுத்தை இறுக்கியதில், மகள் மயங்கி விழுந்தார்.
அவர் இறந்ததாக நினைத்து, தாயும், தந்தையும் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின், இளம் பெண்ணுக்கு சுய நினைவு திரும்பியது.
வனத்தில் இருந்து தட்டுத்தடுமாறி சாலைக்கு வந்து, அப்பகுதியினரிடம் நடந்ததை கூறி, உதவி கேட்டார். அவர்களும் அப்பெண்ணை ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து ஷிவமொக்கா மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கிருந்தவர்களின் உதவியுடன், சொரபா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும், நேற்று கிராமத்துக்கு சென்று தர்ம நாயக்கை கைது செய்தனர். அதன்பின்னரே அவர் மகளை கொலை செய்ய முயற்சித்தது, கிராமத்தினருக்கு தெரிந்தது.