/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காணாமல் போன பா.ஜ., கவுன்சிலர் நேத்ராவதி ஆற்றில் சடலம் மீட்பு காணாமல் போன பா.ஜ., கவுன்சிலர் நேத்ராவதி ஆற்றில் சடலம் மீட்பு
காணாமல் போன பா.ஜ., கவுன்சிலர் நேத்ராவதி ஆற்றில் சடலம் மீட்பு
காணாமல் போன பா.ஜ., கவுன்சிலர் நேத்ராவதி ஆற்றில் சடலம் மீட்பு
காணாமல் போன பா.ஜ., கவுன்சிலர் நேத்ராவதி ஆற்றில் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 05, 2025 11:32 PM

மங்களூரு: பன்ட்வால் அருகில் உள்ள, பானி மங்களூரில் நேத்ராவதி ஆற்றில், பா.ஜ., கவுன்சிலர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் நகராட்சி கவுன்சிலராக இருந்த சக்தி சின்ஹா, காலமானதால் அந்த இடம் காலியானது. அந்த இடத்துக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ரமேஷ் ராய், 50, வெற்றி பெற்றிருந்தார்.
ரமேஷ் ராய் நேற்று முன் தினம் காலையில், வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. கலக்கம் அடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் தகவல் தெரியவில்லை.
எனவே மங்களூரு போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசாரும் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் பன்ட்வால் தாலுகாவின், பானி மங்களூரின், நேத்ராவதி ஆற்றின் பழைய பாலம் அருகில், நேற்று காலை 11:00 மணியளவில், பைக், மொபைல் போன், சட்டை, செருப்பு சந்தேகத்திற்கிடமாக கிடந்தன. இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். பாலம் அருகில் கிடந்த மொபைல் உட்பட, மற்ற பொருட்கள் யாருடையவை என, விசாரித்தபோது, அவை புத்துார் கவுன்சிலர் ரமேஷ் ராயுடையது என்பது தெரிந்தது.
அவர் செருப்பு, மொபைல் போன், சட்டையை வைத்து விட்டு பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். நீச்சல் நிபுணர்களை வரவழைத்து நேத்ராவதி ஆற்றில் தேட துவங்கினர்.
சிறிது நேரத்தில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அவரது இறப்பில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.