/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கர்நாடகா கோலாரில் சோதனை முயற்சி ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கர்நாடகா கோலாரில் சோதனை முயற்சி
ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கர்நாடகா கோலாரில் சோதனை முயற்சி
ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கர்நாடகா கோலாரில் சோதனை முயற்சி
ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கர்நாடகா கோலாரில் சோதனை முயற்சி
ADDED : ஜூன் 05, 2025 11:32 PM
கோலார்: கர்நாடகாவின் முதல் முயற்சியாக கோலார் ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கோலார் தாலுகா, சுகட்டூரில் உள்ள சோமாபுதி அக்ரஹாரா ஏரியில், நீரில் சூரிய மின் தகடுகளை நிறுவுவதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான டெண்டர் செயல்முறையை சிறிய நீர்ப்பாசனத் துறை துவங்கியுள்ளது.
கே.சி.வேலி எனும் கோரமங்களா - செல்லகட்டா வேலி திட்டத்திற்கு பின், இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருப்பதால், சூரிய மின் நிலையத்தை நிறுவ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏரி 2,471.05 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாவட்டத்தின் மிகப்பெரிய மற்றும் மிக விசாலமான ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்.
கோலாரில் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்ட 40-க்கும் மேற்பட்ட ஏரிகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அரசு அமைக்கும். இதன் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கே.சி.வேலி மற்றும் எச்.என்.வேலியில் தண்ணீர் பம்பிங் செய்வதற்கு மின்சாரம் பயன்படுத்துகிறது. இதனால் பல கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. இந்த செலவை குறைக்கும் வகையில், ஏரி நீரில் சோலார் பேனல்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
“மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதனை மின்சார கழகத்தின் மின் கட்டமைப்பில் செலுத்தப்படும். இதனால் மின்சார செலவு குறையும். ஏரியில் நீர்மட்டம் கனிசமாக குறைந்தாலும் எந்த பிரச்னையும் இருக்காது,” என, நீர்ப்பாசன துறை பொறுப்பாளர் விஷ்ணு காமத் தெரிவித்தார்.