/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 65 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது 65 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
65 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
65 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
65 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 06:46 AM

ஞானபாரதி: பெங்களூரில் 28 போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த, 65 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ஞானபாரதி போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு, உல்லால் பகுதியில் ரோந்து சென்றனர்.
பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் ஷாருக்கான், 54, என்பதும், ஞானபாரதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் திருட்டில் ஈடுபடுவதை அவர் தொழிலாக வைத்து இருந்தார். நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகள் தான், அவரது இலக்காக இருந்துள்ளன.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளார். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வீடுகள் உள்ள பகுதிகளில் தான் பெரும்பாலான திருட்டுகளை செய்துள்ளார்.
குதிரை பந்தயத்தில் 40 லட்சம் ரூபாய் இழந்ததால், திருடுவதை தொழிலாக வைத்திருந்தது தெரிந்தது.
இவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.
இவர் கைதாகி இருப்பதன் மூலம் ஞானபாரதி, ஆர்.ஆர்.நகர், பீன்யா, சாம்ராஜ்பேட் உட்பட நகரின் 28 போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த, 65 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.