Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடிக்கடி 'உறவு'க்கு அழைத்த பெண்; கொலை செய்த கள்ளக்காதலன் கைது

அடிக்கடி 'உறவு'க்கு அழைத்த பெண்; கொலை செய்த கள்ளக்காதலன் கைது

அடிக்கடி 'உறவு'க்கு அழைத்த பெண்; கொலை செய்த கள்ளக்காதலன் கைது

அடிக்கடி 'உறவு'க்கு அழைத்த பெண்; கொலை செய்த கள்ளக்காதலன் கைது

ADDED : ஜூன் 26, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
மாண்டியா : மீண்டும் மீண்டும், 'உறவு'க்கு அழைத்த பெண்ணை கொலை செய்த, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, மாண்டியா மாவட்ட எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி நேற்று கூறியதாவது:

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மனைவி பிரீத்தி, 38. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரீத்தி, தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 23ம் தேதி, ஹாசன் எக்ஸ்டென்ஷன் போலீசில், சுந்தரேஷ் அளித்த புகாரில், '22ம் தேதி பணிக்கு சென்ற மனைவி, வீடு திரும்பவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் விசாரணையை துவக்கியபோது, பிரீத்தியின் மொபைல் போன் இன்னும் செயல்பாட்டில் இருப்பதை கண்டறிந்தனர். அந்த எண்ணுக்கு அழைத்தனர். எதிர்முனையில் பேசிய நபர், தன்னை புனித் என்ற தெரிவித்தார்.

மொபைல் போன் குறித்து கேட்டபோது, 'பிரீத்தி என்பவர் மைசூரு, மாண்டியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். நானும் அவருக்கு சுற்றிக் காண்பித்தேன். அவரின் மொபைல் போனை, என் காரில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் மீண்டும் அழைத்தால் கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தேன்' என்றார்.

பிரீத்தியின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, புனித்துடன் பிரீத்தி நீண்ட நேரம் பேசியிருப்பது தெரிந்தது. அத்துடன், முகநுால் சமூக வலைதளத்தை ஆய்வு செய்தபோது, கடந்த 19ம் தேதி முதல் இருவரும் 'சாட்டிங்' செய்தது தெரிந்தது.

அதேவேளையில், கே.ஆர்., பேட்டின் கரோட்டி கிராமத்தில், புனித்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அது பிரீத்தி என்பது தெரிய வந்தது.

புனித்திடம் போலீசார் விசாரித்த போது, பிரீத்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முகநுால் மூலம் பழக்கமான இருவரும், மொபைல் போன் எண்ணை பரிமாறிக் கொண்டனர். மூன்று நாட்களில் இருவரும் பேசி, 'டேட்டிங்' செல்ல முடிவு செய்தனர்.

ஞாயிற்றுக் கிழமை இருவரும் மைசூரு, மாண்டியாவை சுற்றிப்பார்த்தனர். மாண்டியா லாட்ஜில் இருவரும் தங்கி, உடலுறவு கொண்டனர். மீண்டும் உடலுறவுக்கு பிரீத்தி அழைத்தபோது, புனித் மறுத்து விட்டார்.

அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாண்டியாவின் காட்டரகட்டா கிராமம் அருகே வந்தபோது, உடலுறவு கொள்ள பிரீத்தி மீண்டும் வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபமடைந்த புனித், பிரீத்தியை தாக்கினார்.

தலையில் ரத்தம் கொட்டியதில் பிரீத்தி மயங்கினார். அச்சமடைந்த புனித், பிரீத்தியின் தலையில் கல்லை போட்டுக் கொன்று விட்டு, உடலை தன் பண்ணை வீட்டில் மறைத்து வைத்திருந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us