/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு
கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு
கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு
கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 06:50 AM
பெங்களூரு : அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளுக்கு, மாநில தலைமை செயலர் ஷாலினி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கன்னட மொழியில் நிர்வாகம் நடத்த பல முறை சுற்றிக்கை வெளியிட்டிருந்தும் பின்பற்றவில்லை என்று கன்னட மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து அறிக்கை அளித்து வருகிறது. எனவே, மாநில அரசின் அனைத்து துறைகளும் நிர்வாகத்தில் கன்னடத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு, அண்டை மாநில அரசுகள், நீதிமன்றங்கள் உடனான கடித போக்குவரத்து தவிர, மற்ற அனைத்து கடித போக்குவரத்தும் கன்னடத்தில் இருக்க வேண்டும்.
முதல்வரும், அரசு கோப்புகள் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்றும்; இல்லையெனில் அவற்றை திருப்பி அனுப்பி, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். நிர்வாகத்தில் மொழிக் கொள்கையை முழுமையாகவும், அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்துவது, அதிகாரிகள், ஊழியர்களின் கடமை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.