/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்களுக்கு இலவச டிக்கெட் கட்டாயம் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை பெண்களுக்கு இலவச டிக்கெட் கட்டாயம் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
பெண்களுக்கு இலவச டிக்கெட் கட்டாயம் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
பெண்களுக்கு இலவச டிக்கெட் கட்டாயம் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
பெண்களுக்கு இலவச டிக்கெட் கட்டாயம் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
ADDED : மே 10, 2025 11:51 PM
பெங்களூரு: 'இலவசம் என்றாலும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் பெண்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரித்துள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதித் திட்டங்களில் 'சக்தி' திட்டமும் ஒன்றாகும். இதன் கீழ் அரசு பஸ்களில், பெண்கள் மாநிலம் முழுதும் இலவசமாக பயணம் செய்யலாம். தினமும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைகின்றனர். இத்தகைய பெண்கள் ஆதார் கார்டு காண்பித்து, டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். பஸ்சிலிருந்து இறங்கும் வரை டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் பெரும்பாலான பெண்கள், டிக்கெட் பெறுவதில்லை. இதன் விளைவாக எத்தனை பெண்கள் பயணம் செய்தனர் என்ற, சரியான புள்ளி விபரம் தெரிவதில்லை. இது நடத்துநர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இவர்கள் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர்.
பல இடங்களில் ஒரே ஆதார் கார்டு காண்பித்து இரண்டு, மூன்று பெண்கள் பயணம் செய்வதும் நடக்கிறது. இதை கடுமையாக கருதிய கே.எஸ்.ஆர்.டி.சி., பெண்கள் டிக்கெட் பெற்று பயணம் செய்யாவிட்டால், அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., அறிக்கை:
இலவசம் என்பதால் சில பெண்கள் டிக்கெட் பெறாமல் பயணம் செய்வது தெரிய வந்துள்ளது. பெண்கள் ஆதார் கார்டு காண்பித்து டிக்கெட் பெறுவது கட்டாயம்.
எந்த இடத்துக்கு டிக்கெட் பெற்றுள்ளனரோ, அதே இடத்தில் இறங்க வேண்டும்; விதிகளை மீறக்கூடாது. ஒருவேளை விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தொடர்பாக, ஏப்ரலில் 3,780 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் 7,32,495 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.