/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜூன் 30ல் கெம்பே கவுடா ஜெயந்தி பெங்களூரு ரூரல் கலெக்டர் தகவல் ஜூன் 30ல் கெம்பே கவுடா ஜெயந்தி பெங்களூரு ரூரல் கலெக்டர் தகவல்
ஜூன் 30ல் கெம்பே கவுடா ஜெயந்தி பெங்களூரு ரூரல் கலெக்டர் தகவல்
ஜூன் 30ல் கெம்பே கவுடா ஜெயந்தி பெங்களூரு ரூரல் கலெக்டர் தகவல்
ஜூன் 30ல் கெம்பே கவுடா ஜெயந்தி பெங்களூரு ரூரல் கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 11, 2025 01:03 AM

பெங்களூரு : வரும் 30ம் தேதி, கெம்பே கவுடா ஜெயந்தி கொண்டாட, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
கெம்பே கவுடா ஜெயந்தி நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, பெங்களூரு ரூரல் மாவட்ட கலெக்டர் பசவராஜ் தலைமையில், நேற்று ஆலோசனை நடந்தது.
பின், அவர் அளித்த பேட்டி:
கெம்பே கவுடா ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூரின் பாபு ஜெகஜீவன்ராம் பவனில், ஜூன் 27ம் தேதியன்று நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. அன்றைய தினம் காலை 8:30 மணிக்கு, தேவனஹள்ளியின் அவதி கிராமத்தில் இருந்து கெம்பே கவுடா ஜோதி புறப்படும்.
ஜூன் 27ல் கெம்பே கவுடா ஜோதி ரத யாத்திரை நடப்பதால், அரசு சார்பில் மாநில அளவிலான நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பர்.
எனவே ஜூன் 30ம் தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில், கெம்பே கவுடா ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். இம்முறை அர்த்தமுடையதாக கொண்டாடப்படும். மாவட்ட நிர்வாக பவனில் நிகழ்ச்சிகள் நடக்கும். முறைப்படி அழைப்பிதழ் அச்சிட்டு, முக்கியஸ்தர்களுக்கு அளிக்க வேண்டும்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், குடிநீர், உணவு உட்பட, அனைத்து வசதிகளும் செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளின் மாணவர்களுக்கு இலக்கிய போட்டி, விவாத மேடை நடத்தப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நிகழ்ச்சி மேடையில் கவுரவிக்கப்படுவர். இதற்கான பட்டியல் தயாரிக்கும்படி கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
கெம்பே கவுடா ஜெயந்தி நடக்கும் நாளன்று, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் இருந்தும், கெம்பே கவுடாவின் பல்லக்கு ஊர்வலம் நடக்கும். கெம்பே கவுடா ஜோதி ரத யாத்திரைக்கும், மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளிலும் சங்க அமைப்புகள், ஸ்த்ரீ சக்தி குழுவினர், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.