/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 15, 2025 03:56 AM
பெங்களூரு: வெளிநாட்டு சுற்றுலா பயணியர், விசா காலம் முடிந்தும் இந்தியாவில் சட்டவிரோதமாக வசிப்பதை, கர்நாடக உயர்நீதிமன்றம் தீவிரமாக கருதுகிறது.
வெளிநாட்டவரை பணியில் அமர்த்தியுள்ளவர்கள், வெளிநாட்டவர் பதிவு மையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என, அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிரியாவை சேர்ந்த ஐந்து பேர், இந்தியாவுக்கு வந்தனர். இவர்களின் விசா காலம் முடிந்தும், சொந்த நாட்டுக்கு திரும்பாமல், இங்கேயே தங்கி இருந்தனர். தங்களின் விசா காலத்தை நீட்டிக்க உத்தரவிடக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சாந்தி பூஷண், 'சமீப நாட்களாக கல்வி நிறுவனங்களில் படிப்பது, மருத்துவ சிகிச்சை, நிறுவனங்கள், ஆய்வகங்களில் பணியாற்றுவது உட்பட, பல்வேறு காரணங்களை முன்னிட்டு, வெளிநாட்டவர் அதிக எண்ணிக்கையில், இந்தியாவுக்கு வருகின்றனர்.
விசா காலம் முடிந்த பின்னும், இவர்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்புவது இல்லை. இது பிரச்னையை ஏற்படுத்துகிறது' என வாதிட்டார்.
இதை தீவிரமாக கருதிய நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் பிறப்பித்த உத்தரவு:
தங்களிடம் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் குறித்து, வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்துக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோன்று, மருத்துவமனைகளில் வெளி நாட்டவர் சிகிச்சை பெற்றால் அல்லது பணியாற்றினால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்துக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக போலீசார் படிவத்தை தயாரிக்க வேண்டும்.
நிறுவனங்கள் தெரிவிக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய விபரங்கள், ஆவணங்களை வெளிநாட்டவர் பதிவு அலுவலகங்கள் பாதுகாப்பாக நிர்வகிக்க வேண்டும். வெளி நாட்டவர் என்ன நோக்கத்துக்காக வந்துள்ளனர், எங்கு தங்கியுள்ளனர், எப்போது செல்வர் என்ற தகவல்களும் இருக்க வேண்டும்.
விசா காலம் முடிந்த பின்னரும், தங்கள் நாட்டுக்கு செல்லாதவர்கள் பற்றிய தகவல்களையும், வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெளி நாட்டவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்காத நிறுவனங்கள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, அனைத்து நிறுவனங்களுக்கும், மாநில அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.