/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு பா.ஜ., எதிரி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு பா.ஜ., எதிரி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு பா.ஜ., எதிரி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு பா.ஜ., எதிரி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு பா.ஜ., எதிரி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 15, 2025 03:55 AM

யாத்கிர்: கல்யாண கர்நாடக மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'ஆரோக்கிய விழிப்புணர்வு' என்ற பெயரில் 440.63 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, யாத்கிரில் நேற்று நடந்தது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது:
கல்யாண கர்நாடகா பகுதியின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் தலா 5,000 கோடி ரூபாய் வழங்குவதாக, தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் 13,000 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். இதுவரை 5,300 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடந்துள்ளன.
சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. தற்போது 440.63 கோடி ரூபாயில் பல பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கொல்லுார் மல்லப்பா, கல்யாண கர்நாடகாவின் காந்தி என்று அழைக்கப்பட்டார். அவரது நினைவு சின்னம் இங்கு கட்டப்படும்.
பொய்கள் தான் பா.ஜ., தலைவர்களின் வீட்டு கடவுள். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது கல்யாண கர்நாடகாவுக்கு எதுவும் செய்யவில்லை. இப்பகுதியின் மேம்பாட்டுக்கு எதிராக இருந்தனர். கல்யாண கர்நாடகா பிரிவு 371ஜே அமல்படுத்த கோரி, மல்லிகார்ஜுன கார்கே, மறைந்த முன்னாள் முதல்வர் தரம்சிங் உள்ளிட்டோர் போராடினர். இதன் விளைவாக மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அரசியலமைப்பில் திருத்தம் செய்து 371ஜே செயல்படுத்தினார்.
ஜி.எஸ்.டி., வரி வசூலில் நம் மாநிலம் இரண்டாவது இடத்தில் இருப்பது முன்னேற்ற பாதையில் நாம் உள்ளோம் என்பதன் அறிகுறி. கல்யாண கர்நாடகா பகுதியில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.