ADDED : மார் 12, 2026 05:06 AM
பெங்களூரு: ''அரசு வேலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது,'' என அமைச்சர் முனியப்பா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
அரசு வேலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. அனைத்து சமூகங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நியாயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும்.
உள் இடஒதுக்கீடு தொடர்பாக யாரும் போராட்டங்களை நடத்த வேண்டாம். சமூக அமைப்புகள் பொறுமையாக இருக்க வேண்டும். அனைத்து சமூகத்துக்கும் நீதி கிடைக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் வேகமாக முன்னேறி வருகின்றனர். பெண்கள் கடின உழைப்பாளிகள். ஒரு வேலையை துவங்கினால், அதை முடிக்காமல் விடமாட்டார்கள். பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு சமூகத்தில் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
