Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கைதிகளுக்கு கல்வி சிறை அதிகாரிக்கு பாராட்டு

 கைதிகளுக்கு கல்வி சிறை அதிகாரிக்கு பாராட்டு

 கைதிகளுக்கு கல்வி சிறை அதிகாரிக்கு பாராட்டு


ADDED : மார் 12, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு, சிறை அதிகாரி, தன் சொந்த பணத்தில் கல்வி அளிக்கிறார்.

மாண்டியா மாவட்ட சிறை அதிகாரியாக பணியாற்றுபவர் சாந்தம்மா. இவர் பொறுப்புக்கு வந்த பின், கைதிகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். கல்வி மூலமாக அவர்களின் மன மாற்றத்துக்கு, முக்கியத்துவம் அளிக்கிறார்.

திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் அனன்யா ஹார்ட் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில், கைதிகளை எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., படிக்க வாய்ப்பு அளித்துள்ளார். கைதிகளும் ஆர்வமாக கல்வி கற்கின்றனர். பலரும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு தயாராகின்றனர். இவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தகங்கள் செலவை, சிறை அதிகாரி சாந்தம்மாவே ஏற்றுள்ளார். சிறை அறைகளில் வகுப்புகள் நடக்கின்றன.

ஆர்வம் உள்ள கைதிகள், தேர்வுக்கு பெயரை பதிவு செய்து கொள்ள, சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கைதிகள் கல்வியில் கவனம் வைப்பதால், அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுகிறது. விடுதலையாகி வெளியே சென்ற பின், நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள, கல்வி உதவியாக இருக்கும் என்பது, சாந்தம்மாவின் எண்ணமாகும். இவரது முயற்சியை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us