/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயலில் இந்திரா கேன்டீன் திறப்பு தங்கவயலில் இந்திரா கேன்டீன் திறப்பு
தங்கவயலில் இந்திரா கேன்டீன் திறப்பு
தங்கவயலில் இந்திரா கேன்டீன் திறப்பு
தங்கவயலில் இந்திரா கேன்டீன் திறப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:13 PM

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், இந்திரா கேன்டீன் நேற்று திறக்கப்பட்டது.
கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி, தங்கவயல் மாவட்ட எஸ்.பி., சாந்த ராஜு, கோலார் மாவட்ட திட்ட அதிகாரி எஸ்.அம்பிகா, தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார் ஆகியோர் முன்னிலையில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா ரிப்பன் வெட்டி, கேன்டீனை திறந்து வைத்தார்.
நகராட்சி தலைவர் இந்திராகாந்தி, நிலைக் குழுத்தலைவர் வி.முனிசாமி உட்பட கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர். அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டனர்.
பின், ரூபகலா அளித்த பேட்டி:
தினமும் காலையில், ஐந்து ரூபாய்க்கு 500 பேருக்கும்; மதியம், பத்து ரூபாய்க்கு 500 பேருக்கும், இரவு பத்து ரூபாய்க்கு 500 பேருக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அதிகமானோர் உணவு சாப்பிட முன் வந்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். பலரது வேண்டுகோளை ஏற்று, கேன்டீன் திறக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமும் காலையில் 7:00 முதல் 10:00 மணி வரையிலும்; மதியம் 1:30 முதல் 3:30 மணி வரையிலும்; இரவு: 7:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் கேன்டீன் திறந்திருக்கும்.


