/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரிப்பு; ஹூப்பள்ளி போலீசாருக்கு தலைவலி ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரிப்பு; ஹூப்பள்ளி போலீசாருக்கு தலைவலி
ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரிப்பு; ஹூப்பள்ளி போலீசாருக்கு தலைவலி
ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரிப்பு; ஹூப்பள்ளி போலீசாருக்கு தலைவலி
ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரிப்பு; ஹூப்பள்ளி போலீசாருக்கு தலைவலி
ADDED : செப் 10, 2025 10:09 PM
ஹூப்பள்ளி : கர்நாடகாவின், 'சோட்டா மும்பை' என, அழைக்கப்படும் ஹூப்பள்ளிக்கு, வெளி மாநிலங்களில் இருந்து, அதிகமான கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து, கஞ்சா கடத்தும் நபர்கள், பெரும்பாலும் ரயில்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். வேறு மாநிலங்களில் இ ருந்து, ரயிலில் ஹூப்பள்ளிக்கு கஞ்சா கொண்டு வருகின்றனர். இங்கிருந்து கோவாவுக்கு அனுப்புகின்றனர். தார்வாட் மாவட்டத்தில், ஓராண்டில் 40 கிலோ கஞ்சா பிடிபட்டது. இதில் அதிகமான கஞ்சா, ஹூப்பள்ளி ரயில் நிலையத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த, போலீஸ் அதிகாரிகள் பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லை. இது பற்றி, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ஹூப்பள்ளி முக்கியமான வர்த்தக மாவட்டமாகும். இம்மாவட்டம் கர்நாடகாவின் இரண்டாவது தலைநகர் என்றே கருதப்படுகிறது. வியாபாரம், வர்த்தகம் என, பல்வேறு காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், ஹூப்பள்ளிக்கு வருகின்றனர். இத்தகைய மாவட்டத்தில், கஞ்சா விற்பது, அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தம் அளிக்கிறது.
இளைஞர்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் கஞ்சா போதையில் மிதக்கின்றனர். குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக உள்ளது. கஞ்சா கடத்தலுக்கு ரயில்களை பயன்படுத்துவதால், இதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. ரயில்களில் மக்கள் நெரிசல் அதிகம் இருப்பது, ரயில்களில் பரிசோதனை இல்லாததும், கடத்தல்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறது.
ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில், நேற்று (முன் தினம்) 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரண பயணி போன்று, பைக்குள் கஞ்சா கொண்டு வருகின்றனர். ஒடிஷா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சாவை, ஹூப்பள்ளியில் இருந்து கோவாவுக்கு கடத்துகின்றனர்.
ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில், கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். மேலும் கடுமையான நடவடிக்கை எடுத்து, கஞ்சாவை கட்டுப்படுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.