/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துமகூரை 'பெங்களூரு வடக்கு' என மாற்ற அரசிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை துமகூரை 'பெங்களூரு வடக்கு' என மாற்ற அரசிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை
துமகூரை 'பெங்களூரு வடக்கு' என மாற்ற அரசிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை
துமகூரை 'பெங்களூரு வடக்கு' என மாற்ற அரசிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை
துமகூரை 'பெங்களூரு வடக்கு' என மாற்ற அரசிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 07:56 AM

பெங்களூரு : ''துமகூரை பெங்களூரு வடக்கு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
ராம்நகர் மாவட்ட பெயரை, 'பெங்களூரு தெற்கு' என்று மாற்ற, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ராமர் பெயரை மறைக்கவே, பெயரை மாற்றுகின்றனர் என்று குற்றம்சாட்டினர். ஆனால், பல எதிர்ப்புகளையும் மீறி, ராம்நகர் மாவட்டம் 'பெங்களூரு தெற்கு' என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 'துமகூரு மாவட்டத்தை 'பெங்களூரு வடக்கு' என்று பெயர் மாற்றம் செய்ய, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்' என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பெங்களூரு மாவட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது நெலமங்களா வரை பெங்களூரு விரிவடைந்து உள்ளது. நெலமங்களாவில் இருந்து 30 கி.மீ., தொலைவில் துமகூரு மாவட்டம் உள்ளது.
அதுபோன்று, ராம்நகர், கோலார், சிக்கபல்லாபூர் நகரையும் அடைந்து விடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துமகூருக்கும், பெங்களூரு வடக்கு மாவட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் ஏற்படும். நியூயார்க்கில் உள்ளவர்களுக்கு துமகூரு என்றால் பெங்களூரில் இருந்து தொலைவில் உள்ளது என்று நினைக்கிறது. அதுவே 'பெங்களூரு வடக்கு' பெயர் மாற்றினால், அவர்களுக்கு புரிந்துவிடும்.
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துடன் துமகூரில் உள்ள 14 கிராம பஞ்சாயத்துகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் துமகூரு நகரம் தனது எல்லையை விரிவுபடுத்தும்.
துணை முதல்வர் சிவகுமார் சரியாக திட்டமிட்டு, ராம்நகர் பெயரை பெங்களூரு தெற்காக மாற்றி உள்ளார். இதை அரசும் ஒப்புதல் அளித்து, உத்தரவும் வெளியிட்டு உள்ளது. வரும் நாட்களில் இனி ராம்நகரை பெங்களூரு தெற்கு என அழைக்க துவங்கி விடுவர். அதுபோன்று துமகூரும் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.