/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாரம்பரிய சின்னங்கள் சுற்றி கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை பாரம்பரிய சின்னங்கள் சுற்றி கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை
பாரம்பரிய சின்னங்கள் சுற்றி கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை
பாரம்பரிய சின்னங்கள் சுற்றி கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை
பாரம்பரிய சின்னங்கள் சுற்றி கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை
ADDED : ஜூன் 05, 2025 11:12 PM
பெங்களூரு: 'பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களை சுற்றி, எந்தவித புதிய கட்டுமானத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதை அதிகாரிகள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும்' என, மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் டெனிஸ் கிரஸ்டா. இவரது குடும்பத்தினர் சொத்துப் பிரிப்பில், இவருக்கு மங்களா தேவி கோவில் அருகில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை தன் பெயருக்கு, 2023 செப்டம்பர் 27ல் பட்டா மாற்றிக் கொண்டார்.
இந்த நிலத்தில் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொண்டார். இதற்கு ஜனவரி 28ல், ஏ.எஸ்.ஐ., எனும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், டெனிஸ் கிறிஸ்டா ரிட் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பு:
பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்கள் உள்ள பகுதியில், எந்தவொரு கட்டுமான பணிகள் செய்தாலும், ஏ.எஸ்.ஐ., அனுமதி பெற வேண்டும்.
ஆனால், அனுமதி பெறாமல் கட்டடம் கட்ட அனுமதி வழங்குவது, அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாதா?
சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களை சுற்றியுள்ள கட்டடங்களை சீரமைக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டுமே தவிர, அதன் எதிரிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய வழக்கில், புதிய கட்டடம் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகள் மீது, மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை ரீதியான விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.