Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் டெங்கு அதிகரிப்பு சுகாதார துறையினர் எச்சரிக்கை

பெங்களூரில் டெங்கு அதிகரிப்பு சுகாதார துறையினர் எச்சரிக்கை

பெங்களூரில் டெங்கு அதிகரிப்பு சுகாதார துறையினர் எச்சரிக்கை

பெங்களூரில் டெங்கு அதிகரிப்பு சுகாதார துறையினர் எச்சரிக்கை

ADDED : மே 23, 2025 11:03 PM


Google News
பெங்களூரு: பெங்களூரில் பெய்த மழையால், டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. 500 பேருக்கு டெங்கு உறுதியானது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகாரிக்கலாம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக, பெங்களூரில் கோடை மழை வெளுத்து வாங்கியது. சாய் லே - அவுட் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

சாக்கடைகள் உடைப்பெடுத்து கழிவு நீர், மழை நீருடன் கலந்து, வீடுகளில் புகுந்தது. சாலைகள், குடியிருப்புகளில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதன் விளைவாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குழாய்களில் அசுத்தமான குடிநீர் வருகிறது. இதை குடிப்பதாலும், நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. ஒரே வாரத்தில் 500 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மழைநீர் தேங்குவதால், குளிர்ச்சி தன்மை அதிகரித்து, காய்ச்சல், இருமல், சளி, உடற் சோர்வு, தலைவலி, அலர்ஜி என, பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பெங்களூரின் விக்டோரியா, கே.சி.ஜெனரல், பவுரிங் உட்பட அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நோய் பரவுவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:

வானிலை மாற்றம், மழையால் சாலைகளில் தேங்கியுள்ள நீர், நாள் முழுதும் குளிர்ச்சியான சூழ்நிலையே காரணம்.

நகரின் குடிசைப்பகுதி, நெருக்கடியான குடியிருப்புகளில் வசிப்போருக்கு, நோய் பாதிப்பு அதிகம். குறிப்பாக மூத்த குடிமக்கள், சிறார்கள் நோய்களுக்கு ஆளாகின்றனர்.

டெங்கு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுவது அவசியம். இல்லாவிட்டால் உயிருக்கு அபாயம் ஏற்படலாம்.

பெங்களூரில் 500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுற்றுப்பகுதிகளை சுத்தமாக வைத்திருங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us