/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.1.50 லட்சம் லஞ்சம் அரசு அதிகாரி கைது ரூ.1.50 லட்சம் லஞ்சம் அரசு அதிகாரி கைது
ரூ.1.50 லட்சம் லஞ்சம் அரசு அதிகாரி கைது
ரூ.1.50 லட்சம் லஞ்சம் அரசு அதிகாரி கைது
ரூ.1.50 லட்சம் லஞ்சம் அரசு அதிகாரி கைது
ADDED : ஜூன் 06, 2025 11:27 PM
பெங்களூரு: ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் உள்ள கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில்முறை மேம்பாட்டு பகுதிகள் வாரியத்தில் நில அளவை பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் நரேந்திர குமார், 51.
இவர், ரவி என்பவரிடம், நிலம் தொடர்பான பத்திரத்தில் ஒப்புதல் அளிக்க 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து ரவி, லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார்.
நேற்று, ரவி 1.50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை நரேந்திர குமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், நரேந்திர குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.