/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கூட்ட கட்டுப்பாடு சட்டம் கொண்டு வர அரசு முடிவு கூட்ட கட்டுப்பாடு சட்டம் கொண்டு வர அரசு முடிவு
கூட்ட கட்டுப்பாடு சட்டம் கொண்டு வர அரசு முடிவு
கூட்ட கட்டுப்பாடு சட்டம் கொண்டு வர அரசு முடிவு
கூட்ட கட்டுப்பாடு சட்டம் கொண்டு வர அரசு முடிவு
ADDED : ஜூன் 19, 2025 11:28 PM
பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, கூட்ட கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் ஆர்.சி.பி., அணி கோப்பை வென்றதை கொண்டாட, கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மைதானம் முன்பு ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதையடுத்து மக்கள் கூடும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, கூட்ட கட்டுப்பாடு சட்டம் - 2025ஐ கொண்டு வர நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி, விளையாட்டு, பிற வணிக நிகழ்ச்சிகளுக்கு கடுமையான விதிகள் வகுக்கப்பட உள்ளன.
அதாவது நிகழ்ச்சியின் முன்போ, நிகழ்ச்சியின் போதோ கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலோ; நிகழ்ச்சியின்போது பெண்களுக்கு பாலியல் தொல்லை; விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களே பொறுப்பு.
கூட்ட நெரிசலில் சிக்கி யாராவது இறந்தாலோ அல்லது காயம் அடைந்தாலோ, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, ஏலத்தில் விட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வழங்கும்.
தவறு செய்பவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கவும் முடியும். இந்த சட்ட மசோதாவை சட்டசபை அல்லது மேல்சபை முன் விவாதம் செய்து ஒப்புதல் கிடைத்தவுடன், கவர்னர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னர் அனுமதி கொடுத்த பின், சட்டம் அமல்படுத்தப்படும்.


