/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி சாவு காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி சாவு
காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி சாவு
காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி சாவு
காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி சாவு
ADDED : மே 21, 2025 11:10 PM

குடகு: மடிகேரியின் தேவரபுரா கிராமத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு, எஸ்டேட் தொழிலாளி பலியானார்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின், தேவரபுரா கிராமத்தில் வசித்தவர் அண்ணய்யா, 41. இவர் தனியார் எஸ்டேட்டில் பணியாற்றினார். நேற்று காலை வழக்கம் போன்று, பணிக்காக வீட்டில் இருந்து எஸ்டேட்டுக்கு புறப்பட்டார்.
கிராமத்தின் அய்யப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டு யானை எதிரே வந்தது. இதை பார்த்து பீதியடைந்த அவர், தப்பியோடினார்; யானையும் விடாமல் அவரை விரட்டியது.
வனப்பகுதி எல்லையில், குறுகலான பாதையாக இருந்ததால், அவரால் நுழைய முடியாமல் பரிதவித்தார். அப்போது யானை அவரை கீழே தள்ளி, மிதித்து கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றது.
அய்யப்பன் கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. கிராமத்தினர் ஒன்று திரண்டு பூஜை செய்து கொண்டிருந்தனர். இவர்கள் அண்ணய்யாவின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்து பார்த்த போது, அவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு திரிந்து கொண்டிருந்த யானை, வனத்துறையினர், கிராமத்தினரை தாக்க முயற்சித்தது. அதனை வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டினர்.
ஆண்டு தோறும் இக்கிராமத்தில் நடக்கும் திருவிழா, மிகவும் சிறப்பானது. பழங்குடியினர் உட்பட மக்கள் பங்கேற்பர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆனால் எஸ்டேட் தொழிலாளி அண்ணய்யா, காட்டு யானைக்கு பலியானதால், திருவிழா களையிழந்து காணப்பட்டது.