/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு
பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு
பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு
பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 04, 2025 11:19 PM

தங்கவயல்: பி.ஜி.எம்.எல்., பள்ளி எனப்படும் பார்க்கின்சன் மெம்மோரியல் ஆங்கிலப் பள்ளியை, அரசு கன்னடப் பள்ளியாக மாற்றுவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.
தங்கச்சுரங்கம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து, ஜெர்மன் உட்பட பல வெளிநாட்டினர் குடும்பத்துடன் தங்கவயலில் வந்து குடியேறினர். அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அனைத்து வசதிகளுடனும் ஆங்கிலப் பள்ளி அமைக்கப்பட்டது.
உரிகம் பகுதியில் 1- முதல் 7ம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளி, 'பார்க்கின்சன் மெம்மோரியல் பள்ளி என்றும்; மாரிகுப்பத்தில் 8 முதல் -10ம் வகுப்புகள் வரையிலான உயர்நிலைப் பள்ளி, 'லிண்ட்சே மெம்மோரியல் பள்ளி' என்ற பெயரிலும் இயங்கின.
இணைப்பு
தங்கச் சுரங்கம் 2001ல் மூடப்பட்ட பின், லிண்ட்சே உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டு, பார்க்கின்சன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. இப்பள்ளியில் படித்த பலர் உயர் பதவிகளில் உள்ளனர்; பலர் வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
தங்கச்சுரங்கம் மூடும் வரை, இப்பள்ளி, தங்கச் சுரங்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், தொழிலாளர் நலத்துறை முயற்சியால் அரசு மானியம் பெறும் பள்ளியானது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த இப்பள்ளியில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்தனர்.
தற்போது, இப்பள்ளியை இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, சங்கம் அமைத்து பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தனர்; அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
தயக்கம்
கடந்த ஆண்டு எஸ்.எல்.எல்.சி., தேர்வை இப்பள்ளியின் 38 பேர் எழுதினர். ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர்கள் இல்லாத குறைதான் என்று வட்டார கல்வி அதிகாரி மீது புகார்கள் எழுந்தன. தரமான கல்வி கிடைக்காததால், இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்கினர்.
'இப்பள்ளியை எங்களிடம் ஒப்படையுங்கள்; நாங்களே தத்தெடுத்து நடத்துகிறோம்' என, முன்னாள் மாணவர் சங்கம் முயன்று வருகிறது. இருந்தாலும் இப்பள்ளி மூடப்படுமோ என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில், நேற்று காலையில் கர்நாடக அரசின் கல்வித் துறை முதன்மை செயலர் ரஷ்மி மகேஷ், கோலார் மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.
தங்கச் சுரங்க நிறுவனத்தின் நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியின் தரம் குறைந்த காரணங்களை கேட்டறிந்தனர்.
இப்பள்ளியை அரசு கன்னட பள்ளியாக மாற்றும் திட்டம் உள்ளதாக கல்வித் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.