/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.10 கோடி போதை பறிமுதல்: நைஜீரிய இளம்பெண் கைது ரூ.10 கோடி போதை பறிமுதல்: நைஜீரிய இளம்பெண் கைது
ரூ.10 கோடி போதை பறிமுதல்: நைஜீரிய இளம்பெண் கைது
ரூ.10 கோடி போதை பறிமுதல்: நைஜீரிய இளம்பெண் கைது
ரூ.10 கோடி போதை பறிமுதல்: நைஜீரிய இளம்பெண் கைது
ADDED : ஜூன் 13, 2025 11:15 PM

சிக்கஜாலா: பெங்களூரில் எம்.டி.எம்.ஏ., போதை பொருள் விற்ற, நைஜீரிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, சிக்கஜாலா அருகே ராஜனுகுண்டே பகுதியில், இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பதாக சி.சி.பி., போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சிக்கஜாலா போலீசாருடன் இணைந்து ராஜனுகுண்டேயில் சி.சி.பி., ரோந்து சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்ற இளம்பெண்ணை பிடித்தனர்.
விசாரணை
அந்த பெண் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, ஒரு கவரில் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் இருந்தது. 5.32 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 10 கோடி ரூபாய். பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் அகின்வுன்மி பிரின்சஸ் இபியோலு, 25, என்பது தெரிந்தது.
கல்வி விசா
கடந்த 2021ம் ஆண்டு கல்வி விசாவில் இந்தியா வந்த இவர், முதலில் டில்லியில் வசித்து வந்தார். 2022ல் தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் படிக்க கல்வி விசா பெற்றார்.
ஆனால் கல்லுாரியில் சேராமல், பெங்களூரு வந்து சிக்கஜாலாவில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, போதைப் பொருள் விற்று வந்தது, விசாரணையில் தெரிய வந்தது.
டில்லியில் உள்ள நைஜீரிய நண்பர்களிடம் இருந்து, போதைப் பொருளை வாங்கி பஸ் மூலம் கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்று அதில் கிடைக்கும் பணத்தை, ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரிய வந்தது.
இவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.