/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு அரண்மனை பகுதியில் 'ட்ரோன்' தடை கடுமையாக அமல் மைசூரு அரண்மனை பகுதியில் 'ட்ரோன்' தடை கடுமையாக அமல்
மைசூரு அரண்மனை பகுதியில் 'ட்ரோன்' தடை கடுமையாக அமல்
மைசூரு அரண்மனை பகுதியில் 'ட்ரோன்' தடை கடுமையாக அமல்
மைசூரு அரண்மனை பகுதியில் 'ட்ரோன்' தடை கடுமையாக அமல்
ADDED : மே 16, 2025 11:01 PM

மைசூரு: பாதுகாப்பு நடவடிக்கையாக மைசூரு அரண்மனையை சுற்றி, 'ட்ரோன்' பறக்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நமது நாட்டின் முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து கர்நாடகாவில் பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, மைசூரு அரண்மனையை சுற்றி ட்ரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது, 'பாரத் ட்ரோன் சட்டம் 2021'ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரண்மனையின் நான்கு நுழைவாயில் பகுதியிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சுற்றுலா தலமான மைசூரு அரண்மனையின் பாதுகாப்புக்காக, தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரண்மனையின் துணை இயக்குநர் சுப்பிரமணியா அளித்த பேட்டி:
மைசூரு நகரில் உள்ள பாராம்பரிய சின்னங்கள் மீது ட்ரோன் பறக்க விடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 'போட்டோ ஷூட்' எடுக்க ட்ரோன் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. தனியுரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே, அரண்மனை மைதானத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றியுள்ள பகுதி, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதையும் மீறி பலர் ட்ரோன் பறக்க விடுகின்றனர். தொடர்ச்சியான மீறல்கள் எங்களை உறுதியாக செயல்பட துாண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.