/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரவுடி கொலையில் கைதான ஜெகதீஷுக்கு நடிகையுடன் தொடர்பு? ரவுடி கொலையில் கைதான ஜெகதீஷுக்கு நடிகையுடன் தொடர்பு?
ரவுடி கொலையில் கைதான ஜெகதீஷுக்கு நடிகையுடன் தொடர்பு?
ரவுடி கொலையில் கைதான ஜெகதீஷுக்கு நடிகையுடன் தொடர்பு?
ரவுடி கொலையில் கைதான ஜெகதீஷுக்கு நடிகையுடன் தொடர்பு?
ADDED : செப் 11, 2025 07:21 AM

பெங்களூரு : பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலையில் கைதான ஜெகதீஷ், நடிகை ரச்சிதா ராமுக்கும், எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று, போலீசாரிடம் கூறி உள்ளார்.
பெங்களூரு பாரதி நகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், கடந்த ஜூலை 15ம் தேதி வீட்டின் முன் கொலை செய்யப்பட்டார். கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், அவரது ஆதரவாளர் ஜெகதீஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவானது. இவ்வழக்கில் கோலாரை சேர்ந்த கூலிப்படையினர் உட்பட 15 பேரை, சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ஜெகதீஷ், இந்தியாவுக்கு திரும்பி வந்த போது, கடந்த மாதம் 25ம் தேதி டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர்.
'நிலத்தகராறில் சிவகுமாரை கொலை செய்தோம்; இந்த வழக்கிற்கும், எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன் ஜெகதீஷ் கூறினார். இந்நிலையில் நடிகை ரச்சிதா ராமுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை காட்டி, ஜெகதீசிடம் விசாரிக்கப்பட்டது.
நடிகைக்கும், எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. இயக்குநர் ரவி போபண்ணாவின் படப்பிடிப்பில், நடிகை ரச்சிதா ராமை சந்தித்ததாகவும், நான் அவருடைய ரசிகர் என்பதால், நகைகள், புடவையை பரிசாக கொடுத்ததாகவும் கூறி உள்ளார். ஆனாலும் நடிகையுடன், ஜெகதீசுக்கு பணம் கொடுக்கல், வாங்கல் ஏதாவது உள்ளதா என்றும், விசாரணை நடக்கிறது.