Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சோதனையின் போது வாகன சாவியை பறிக்க கூடாது என்று டி.ஜி.பி., உத்தரவு

சோதனையின் போது வாகன சாவியை பறிக்க கூடாது என்று டி.ஜி.பி., உத்தரவு

சோதனையின் போது வாகன சாவியை பறிக்க கூடாது என்று டி.ஜி.பி., உத்தரவு

சோதனையின் போது வாகன சாவியை பறிக்க கூடாது என்று டி.ஜி.பி., உத்தரவு

ADDED : ஜூன் 02, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : ''வாகன சோதனையில் ஈடுபடும்போது, வாகனங்களின் சாவியை பறிக்க கூடாது,'' என்று, போலீசாருக்கு, டி.ஜி.பி., சலீம் உத்தரவிட்டு உள்ளார்.

மாண்டியா டவுனில் கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின் போது, ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை இறந்தது.

இச்சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாகன சோதனை தொடர்பாக டி.ஜி.பி., சலீம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளார்.

அதன் விபரம்:

 வாகன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று காரணமின்றி வாகனங்களை நிறுத்த கூடாது. போக்குவரத்து விதிகளை மீறுவது வெளிப்படையாக தெரிந்தால் வாகனங்களை நிறுத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

 திடீரென சாலையின் குறுக்கே வந்து, வாகனங்களை நிறுத்த கூடாது.

 இருசக்கர வாகனத்தில் செல்வோர், வாகன சோதனையின் போது நிற்காமல் சென்றால் அவர்களை பிடித்து இழுக்கவோ, வாகனங்களின் சாவியை பறிக்கவோ கூடாது.

 வாகன சோதனையில் இருந்து தப்பிக்கும் வாகன ஓட்டிகளை பிடிக்க துரத்தி செல்வதற்கு பதில், வாகனத்தின் பதிவெண்ணை குறித்து கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

 போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்யும்போதோ, வாகன சோதனையின் போதே போலீசார் கண்டிப்பாக, 'பாடி கேமரா' எனும் உடலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா அணிந்திருக்க வேண்டும்.

 போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிப்பது குறித்து அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

 சிக்னல்கள் இருக்கும் பகுதியின் அருகில் நின்று கொண்டு வாகன சோதனை செய்யலாம். எக்காரணம் கொண்டும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்த முயற்சிக்க கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us