/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குழந்தையை பராமரிக்கும் பணிக்கு வந்து ரூ.32,000த்துடன் இளம்பெண் ஓட்டம் குழந்தையை பராமரிக்கும் பணிக்கு வந்து ரூ.32,000த்துடன் இளம்பெண் ஓட்டம்
குழந்தையை பராமரிக்கும் பணிக்கு வந்து ரூ.32,000த்துடன் இளம்பெண் ஓட்டம்
குழந்தையை பராமரிக்கும் பணிக்கு வந்து ரூ.32,000த்துடன் இளம்பெண் ஓட்டம்
குழந்தையை பராமரிக்கும் பணிக்கு வந்து ரூ.32,000த்துடன் இளம்பெண் ஓட்டம்
ADDED : ஜூன் 02, 2025 01:39 AM
கும்பலகோடு : குழந்தையை பார்த்து கொள்ள வந்த இளம்பெண் ஒருவர், 32,000 ரூபாய் முன்பணம் பெற்று கொண்டு தப்பி ஓடினார்.
பெங்களூரின் கும்பலகோடில் வசிக்கும் அனுாப், 34, தனியார் கல்லுாரியில் பேராசிரியர். இவரது மனைவி ரஷ்மி, 28, தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மானேஜராக பணியாற்றுகிறார்.
தம்பதிக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவருமே பணிக்கு செல்வதால், குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் வேறு யாரும் இல்லை.
வீட்டு பணியாள்
எனவே, 'சுலேகா' செயலியில், சமிக்ஷா மேட் சர்வீசில் வீட்டு பணியாளை தேடினர். இதில் செயலியில் சச்சின் என்பவரின் மொபைல் எண் கிடைத்தது.
அதில் அவரை தொடர்பு கொண்டு, தங்கள் குழந்தையை பார்த்து கொள்ள, ஆள் வேண்டும் என, கேட்டனர். அவரும் பிமிலா என்ற இளம்பெண்ணை அனுப்பி வைப்பதாக கூறினார்.
அதன்படி நேற்று முன்தினம் பிமிலா என்பவர், ரஷ்மி வீட்டுக்கு வந்தார். அவர்களுடன் பேச்சு நடத்தி, குழந்தையை பார்த்து கொள்ள சம்மதித்தார்.
தப்பி ஓட்டம்
மாதம் 16,000 ரூபாய் ஊதியம் வழங்குவதாக தம்பதி கூறினர். தன் வீட்டில் பிரச்னை உள்ளது. பணம் தேவைப்படுகிறது என, கூறி இரண்டு மாதங்களுக்கான ஊதியம் 32,000 ரூபாய், முன் பணம் பெற்றுக்கொண்டார்.
அரை மணி நேரம் வீட்டை சுற்றி பார்த்தார். அதன்பின் பிமிலா மொபைல் போனில் பேசுவது போன்று நடித்து, தப்பி ஓடிவிட்டார். அவர் நீண்ட நேரமாக வரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை தம்பதி உணர்ந்தனர்.
இது குறித்து, கும்பலகோடு போலீஸ் திலையத்தில் புகார் செய்து உள்ளனர். அவர்களும் மோசடி பெண்ணை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
பிமிலாவை பற்றி சரியாக தெரியாமல், குழந்தையை அவரிடம் ஒப்படைத்திருந்தால் என்ன கதி. குழந்தையை அம்போவென விட்டு விட்டு வீட்டில் உள்ள பணம், தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடியிருப்பார்.
குழந்தைக்கு ஆபத்து விளைவித்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. அதிர்ஷ்டவசமாக அவரது குணம் இப்போதே தெரிந்தது என, தம்பதி நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
போலீசார் கூறியதாவது:
வீட்டு வேலைக்கோ, குழந்தையை பார்த்து கொள்ளவோ ஆன்லைன் மூலம் ஆட்களை தேடும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெங்களூரில் நடக்கும் பல குற்றங்களுக்கு, பணியாட்களே காரணமாக உள்ளனர். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பணிக்கு ஆட்களை நியமிக்கும் போது, அவரது ஆவணங்களை பெற்று கொண்டு, பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் பணிக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.