ADDED : ஜூன் 18, 2025 11:04 PM
பெங்களூரு: கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் நேற்றைய அறிக்கை:
கர்நாடகாவில் மொத்தம் 653 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், 99 பேர் குணமடைந்துள்ளனர். 409 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தொற்று இருப்பதற்கான வாய்ப்பு 13.6 சதவீதம் பேர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.