/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மோசடி வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடாவுக்கு ஜாமின் மோசடி வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடாவுக்கு ஜாமின்
மோசடி வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடாவுக்கு ஜாமின்
மோசடி வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடாவுக்கு ஜாமின்
மோசடி வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடாவுக்கு ஜாமின்
ADDED : ஜூன் 18, 2025 11:06 PM

பெங்களூரு: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, ஐஸ்வர்யா கவுடாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடா, 33, என்பவரை, ஏப்ரல் 25ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அவர், ஜாமின் கேட்டு பெங்களூரு முதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி முரளிதர் பை விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வக்கீல் சுனில் தன் வாதத்தின்போது, 'எனது மனுதாரரை இந்த வழக்கில் திட்டமிட்டு அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. பெண் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்றார்.
அமலாக்கத்துறை வக்கீல் சந்தேஷ், 'மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு உள்ளது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டு, ஐஸ்வர்யாவுக்கு நேற்று ஜாமின் வழங்கினார்.
பிணைய தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்; வீட்டின் முகவரியை மாற்ற கூடாது; பெங்களூரை விட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.