/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சேத்தனுக்கு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு சேத்தனுக்கு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு
சேத்தனுக்கு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு
சேத்தனுக்கு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு
சேத்தனுக்கு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூன் 18, 2025 11:00 PM

பெங்களூரு: ஐ.பி.எஸ்., சேத்தனுக்கு உளவுத் துறை டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பை, அரசு வழங்கியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் எதிரொலியாக, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ஹேமந்த் நிம்பால்கர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கூடுதல் டி.ஜி.பி.,யாக ரவி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் உளவுத் துறையில் மேலும் ஒரு மாற்றத்தை அரசு செய்துள்ளது. துறையின் டி.ஐ.ஜி.,யாக ஐ.பி.எஸ்., சேத்தனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை டி.ஐ.ஜி., ஆக உள்ளார்.