Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செப்., 15 முதல் 17 வரை காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

செப்., 15 முதல் 17 வரை காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

செப்., 15 முதல் 17 வரை காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

செப்., 15 முதல் 17 வரை காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

ADDED : செப் 10, 2025 01:27 AM


Google News
பெங்களூரு : 'பெங்களூரு நகரில் வரும் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது' என, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

பெங்களூரு நகருக்கு காவிரி குடிநீர் வழங்கும் குடிநீரேற்று நிலையத்தில் அவசர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, கீழ்க்கண்ட குடிநீர் வினியோக பகுதிகளில் குடிநீர் தடை செய்யப்படுகிறது.

காவிரி 5வது குடிநீரேற்று நிலையம்: இங்கு 15ம் தேதி அதிகாலை 1:00 முதல் 17ம் தேதி மதியம் 1:00 மணி வரை 60 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படாது

காவிரி 1, 2, 3, 4 குடிநீரேற்று நிலையங்கள்: இந்த நான்கு நிலையங்களில் 16ல் காலை 6:00 முதல் 17ல் காலை 6:00 மணி வரை 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தடையால் பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் காவிரி நீர் வினியோகத்தில் இடையூறு ஏற்படும். எனவே, இந்த தேதிகளுக்கு போதுமான தண்ணீரை சேமித்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நீர் வினியோக நிலையத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க, பராமரிப்பு பணிகள் அவசியம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மூன்று நாட்கள் தண்ணீர் தடை செய்யப்படுவதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us