/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் ஜாமின் மனு தள்ளுபடி பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் ஜாமின் மனு தள்ளுபடி
பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் ஜாமின் மனு தள்ளுபடி
பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் ஜாமின் மனு தள்ளுபடி
பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : செப் 10, 2025 01:27 AM
பெங்களூரு : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஜாமின் கோரியவரின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டாவை சேர்ந்தவர் சந்திரப்பா, 37. ஏற்கனவே திருமணமானவர். இ வரது பக்கத்து வீட்டில், தாயும், அவரது மகளும் வசித்து வந்தனர். 2022 ஜூலை 7ம் தேதி, மகளை பள்ளிக்குச் செல்ல கூறிவிட்டு, தாய் பணிக்கு சென்றுவிட்டார்.
அப்போது அவர் வீட்டுக்குள் நுழைந்த சந்திரப்பா, சிறுமியை, வலுக்கட்டாயமாக தன் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, மாந்தோப்புக்கு கூட்டிச் சென்றார். அங்கு அவரை மிரட்டி பலாத்காரம் செய்தார்.
அதுமட்டுமின்றி, சிறுமியை அங்கிருந்து நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஒன்றில் பணிக்கு அமர்த்தினார்.
இதற்கிடையில், பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று சித்லகட்டா ஊரக போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் தாபாவுக்கு சென்ற சந்திரப்பா, சிறுமியை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு நாள், பாதிக்கப்பட்ட சிறுமி, தாபாவுக்கு வந்த ஒருவரிடம் மொபைல் போனை வாங்கி, தன் உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்து, அவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்டனர்.
சிறுமியை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு நடந்த விஷயங்களை சிறுமி கூறினார். இதையடுத்து சந்திரப்பாவை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சந்திரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட பட்டியல் ஜாதியினர், சக்தி வாய்ந்த நபர்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மிகவும் விழிப்புடன் இருக்க, சமூகத்திற்கு வலுவான செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் இது. சிறுமியை கடத்தி சென்று, பலாத்காரம் செய்தது மன்னிக்கத்தக்க செயல் அல்ல.
இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல், பெ ண்கள், குழந்தைகளின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது.