/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராய்ச்சூர் கலாசார திருவிழா 1 டன் கல் இழுத்த காளைகள் ராய்ச்சூர் கலாசார திருவிழா 1 டன் கல் இழுத்த காளைகள்
ராய்ச்சூர் கலாசார திருவிழா 1 டன் கல் இழுத்த காளைகள்
ராய்ச்சூர் கலாசார திருவிழா 1 டன் கல் இழுத்த காளைகள்
ராய்ச்சூர் கலாசார திருவிழா 1 டன் கல் இழுத்த காளைகள்
ADDED : ஜூன் 11, 2025 08:10 AM

பல்லாரி: பருவகால ராய்ச்சூர் கலாசார திருவிழாவில், அதிக எடை கொண்ட கற்களை இழுத்த காளை ஜோடிக்கு, 75,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
ராய்ச்சூர் மாவட்டம், முன்னுார் கவுப் சமாஜ் சார்பில் ஆண்டுதோறும் பருவகால ராய்ச்சூர் கலாசார திருவிழா மூன்று நாட்கள் நடக்கும். இந்நாட்களில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படும்.
முதல் நாளான நேற்று பலமான காளை ஜோடிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் ஒவ்வொரு ஜோடி காளைகளுக்கும் 20 நிமிடம் ஒதுக்கப்படும்.
இந்நேரத்தில் இரு காளைகளுக்கு இடையே 1 டன் எடை கொண்ட பெரிய நீளமான பாறையை கழுத்தில் கட்டிவிடுவர். இக்காளைகள் குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் இழுத்துச் செல்லும் துாரத்தை வைத்து பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியில் 11 ஜோடி காளைகள் பங்கேற்றன.
இதன்படி, மாவட்டத்தின் அந்த்ரோல் கிராமத்தை சேர்ந்த ஆனந்த ரெட்டிக்கு சொந்தமான காளைகள், 3,600 அடி இழுத்துச் சென்று முதல் பரிசு வென்றது. இவருக்கு 75,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசு, தேவதுர்காவின் மரபள்ளி கிராமத்தின் ரவிகவுடா காளைகள் 3,456 அடி இழுத்து சென்று, 55,000 ரூபாய் ரொக்கம் பெற்றது. மூன்றாவது பரிசாக, ராம்துர்கின் திப்பையா நாயக்கின் காளைகள் 3,300 அடி இழுத்து சென்று, 45,000 ரூபாய் பரிசு பெற்றது.
இதுபோன்று முதல் எட்டு இடங்கள் பிடித்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காண, அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டனர்.